இல்லங்கள் தோறும்
இருக்க வேண்டிய புத்தகங்கள்

கரு முதல் திரு வரை

கருவிலிருந்து திரு வரை இந்நூல் நம்முடைய தேவைகளை முறைப்படுத்தி அவற்றை பெற்று வாழ திருவருள் பாங்கின் வண்ணம் அமைந்துள்ளது மனிதராய் பிறந்து நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைவன் திருவடியில் ஆனந்தமாய் இருக்க வேண்டும்

நம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைப் பகுதிகளை பன்னிரண்டு பகுதிகளாக பிரித்து அவற்றுக்கு ஏற்ப இந்நூல் கரு முதல் திரு வரை என தொகுக்கப்பட்டுள்ளது

இந்த நூலின் பகுதிகள்

1.குழந்தை பேறு

2.குரு அருள்

3.வினை நீக்கம்

4.நோயிலிருந்து பாதுகாப்பு

5.கல்விச்செல்வம்

6.செல்வம்

7.திருமணம்

8. திருத்தல செலவு

9. திருமேனி காண்டல்

10. இறைவனை போற்றி பரவுதல்

11.அடியார்களை
வழிபாடு செய்தல்

12. வீடு பேறு

தெய்வத் தமிழ் மந்திரம்

தெய்வத்தமிழ் மந்திரம் என்கின்ற இந்த புத்தகம், பன்னிரு திருமுறைகளின் தொகுப்பு நூலாக அமைந்துள்ளது. பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளையின் சார்பாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகியலில் வாழ்வதற்கு தேவையான பல பதிகங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, குரு அருள் பெறுதல், திருமணம் நடைபெறுதல், நல்ல குழந்தைகள் பிறத்தல், செல்வச் செழிப்புடன் வாழ்தல் போன்ற பல்வேறு நலன்களுக்கு உரிய பதிகங்கள் இந்த நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த நூலின் பிற்பகுதியில் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சிவபெருமான் மற்றும் உமையம்மைக்கு உரிய வழிபாட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, கோயில் வழிபாடுகள் மற்றும் வாழ்வியல் சடங்குகளான திருக்குட நன்னீராட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பாடல்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

வேள்வி, விரதம் மற்றும் உபச்சார வழிபாடுகளுக்குப் பின் முன்னிலைப் பரவுவதற்குரிய சிறப்பான பதிகங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் நெறி வழிபாட்டில் ஆர்வம் கொண்டோர் மற்றும் திருமுறை வழிபாட்டை பரப்ப விரும்புவோர் இந்த புத்தகத்தைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என, தங்கள் பொன்னார் திருவடிகளுக்கு எங்களது பணிவான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்றோம்.

இந்த நூலின் பகுதிகள்

1.குருவருள் பெற

2.ஐந்தெழுத்துத் திருப்பதிகங்கள்

3.திருமணம் நடைபெற

4.நன்மக்கட் பேறு அடைய

5.கல்விச் செல்வம் பெற

6.செல்வம் பெற

7.வினை நீக்கப் பதிகங்கள்

8. நோயிலிருந்து விடுபட

9. இறையருள் பெற

எங்கள் ஆன்மிக பதிவுகள் பதிவுகள் பதிவுகள்

“கரு முதல் திரு வரை” மற்றும் “தெய்வத் தமிழ் மந்திரம்” போன்ற ஆன்மிக நூல்களின் ஆழமான அர்த்தங்கள், மந்திரங்களின் சக்தி, மற்றும் மன அமைதியை பெற உதவும் வழிகள் குறித்து இங்கு பதிவுகள் வழங்கப்படுகின்றன. ஆன்மிக வளர்ச்சி, தெய்வ அருள், மற்றும் தினசரி வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை உருவாக்கும் பயனுள்ள தகவல்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.